ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது!

1.
ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகிறது
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுதே! – ஆறுதலின்

2.
உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
துாய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள்! – ஆறுதலின்

3.
உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்!
நடந்தாலும் சோர்வடையார்! – ஆறுதலின்

4.
கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமைமேலே வல்லமைகொண்டு
சீயோனைக் காண்பார்கள்! – ஆறுதலின்



aarudhalin theyvame ummudaiya thiruschamukam

aarudhalin theyvame ummudaiya thiruschamukam
evvalavu inpamanathu!

1.
aaththuma thevane ummaiye nokki
aarvamudan kadharukirathu
ullamum udalum ovvoru nalum
kempeeriththu sathdhamiduthe! – aarudhalin

2.
ummudaiya sannithil dhangkiyirupor
unmaiyile bakkiyavankal
thuya manathudan thuthibbarkal
thuthiththuk kondirubbarkal! – aarudhalin

3.
ummile belan kollum manidharkalellam
unmaiyile bakkiyavankal
oodinalum kalaibpadaiyar!
natanththalum sorvadaiyar! – aarudhalin

4.
kannerin pathaiyil nadakkum pathaiyellam
kalibbana neerutrray marrik kolvarkal
vallamaimele vallamaikondu
seeyonaik kanbarkal! – aarudhalin